b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 5 June 2013

நீதி கதைகள் 12

                                            ஓடு… ஓடு…

   ஒரு காட்டின் எல்லையில், சாது ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர் சாந்தமே உருவெடுத்தவர்.அவருக்குப் பல சீடர்கள்.
ஒருநாள் அந்த குரு, தமது சீடர்களுக்கு உபதேசித்துக்கொண்டிருந்தார். அப்போது, “”எல்லா உயிர்களிலும்இறைவன் இருக்கிறான். எனவே, எல்லாரையும் நீங்கள்வணங்க வேண்டும்,” என்றார் அவர்.ஒருநாள், அவருடைய சீடர்களில் ஒருவன் விறகுசேகரிக்கச் சென்ற இடத்தில், “”எல்லாரும் ஓடிப்போங்க…மதயானை வருது!” என்று யாரோ கூவினர்.
விறகு சேகரிக்கச் சென்ற அந்தச் சீடன் அதுபற்றிகவலைப்படவில்லை. ஒருபக்கம் உயிருக்குப் பயந்து மக்கள்ஓடுகிறதையும், மற்றொரு பக்கம் யானை ஒன்று வேகமாய்வருவதையும் அவன் கண்டான். ஆனால், அவனுக்குஅங்கிருந்து ஓடத் தோன்றவில்லை.எதற்காக ஓட வேண்டும். நம் குருதான் எல்லா உயிர்களிலும்
கடவுள் இருப்பதாய் சொல்லியிருக்கிறாரே.இந்த யானை, பிள்ளையார் சொரூபம்… நம்மை ஒன்றும்செய்யாது,” என்று அவன் எண்ணிக் கொண்டான்.
யானையின் மீதிருந்த பாகன்,  ” ஓடு, ஓடிவிடு…” என்றுகத்தினான். சீடன் விலகினால் தானே. அவனை நெருங்கி வந்த யானை, துதிக்கையால் தூக்கி அவனை வீசியெறிந்துவிட்டது.அவன் பெற்றோரின் புண்ணியமோ, என்னவோ, உயிருக்கு
ஈனமில்லை. உடல் முழுவதும் காயங்களுடன் மூர்ச்சித்துக்கிடந்தான். செய்தியறிந்த குரு, மற்ற சீடர்களுடன் அங்கே வந்தார். அவனை ஆசிரமத்திற்கு தூக்கிச் சென்று சிகிச்சையளித்தார்.சிறிது நேரத்தில் அவன் மூர்ச்சை தெளிந்து, எழுந்தான்.அப்போது சீடர்களுள் ஒருவன் அவனிடம், “”மதயானைவருகிறதென்று எல்லாரும் ஓட்டம் பிடித்தனர். நீ மட்டும் ஏன் ஓடவில்லை?” என்று கேட்டான்.அதற்கு சீடன், “”எல்லா உயிர்களிலும் பகவான் இருப்பதாக நம்
குரு சொல்லியிருக்கிறாரே.  அதனால் நமக்கு ஒண்ணும் ஆகாது என்று எண்ணிக் கொண்டு விட்டேன்!” என்றான்.குரு சிரித்தார். “”முட்டாளே! எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பது உண்மைதான். அவர் யானைக்குள்ளும் இருக்கிறார்.
யானைப் பாகனுக்குள்ளும் இருக்கிறார்.“ஓடு’ என்று பாகன் உன்னை எச்சரித்தது, கடவுள் கொடுத்த எச்சரிக்கை அல்லவா. நீ கடவுள் பேச்சைக் கேட்டிருந்தால் கஷ்டம் வந்திருக்காது!” என்றார்.ஆத்திகன், நாத்திகன், அறிவாளி, முட்டாள், நல்லவன்,
கெட்டவன் என்று எல்லாருக்குள்ளும் இறைவன் இருப்பது உண்மைதான். ஆனால், தனக்குள் இறைவன் இருப்பதை
கெட்டவன் உணர்வதில்லை.இறையுணர்வு இல்லாத காரணத்தால் அவன், மற்றவர்களுக்குத்
தீங்கு செய்வான் என்பதை தற்போது உணர்ந்து கொண்டான் சீடன். 
 (-----------------------------------------------------------------------------------------)
http://www.tamilsirukathaigal.com/2013/05/neethi-kathaigal-19.html

                                             பருந்தும், புறாவும்

அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது. புறாக்களைப் பார்த்த பருந்துவுக்கு எச்சில் ஊறியது. ஏதாவது ஒரு புறா தனியாக வரும்; அதை எப்படியாவது தின்று விடலாம் என்று நீண்ட நேரமாக மறைந்து நின்றது. ஆனால், ஒரு புறா கூட கூட்டத்தை விட்டு தனியாகப் பிரிய வில்லை. இரை தேடும்போது கூட ஒன்றாகவே இருந்தன. எனவே, தந்திரத்தால் மட்டுமே இவை களை வெல்ல முடியும் என நினைத்து, அதைச் செயல்படுத்த ஆரம்பித்தது.
இரை தேடிக்கொண்டிருந்த புறாக்களிடம் சென்று, `அழகிய புறாக்களே! நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், என்னைப்போல வலிமை வாய்ந்த ஒருவர் உங்க ளுக்குத் தலைவனாக இருந்தால், யாராலும் உங்களை எதுவும் செய்ய முடியாது’ என கனிவோடு கூறியது. பருந்தின் பேச்சில் மயங்கிய புறாக்கள், அதைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டன.
அன்று முதல் தினமும் ஒவ்வொரு புறாவாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. இதனால் மற்ற புறாக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. பருந்தும் அவர்களோடு சேர்ந்து கவலைப்படுவதாக நடித்தது. ஆனால், கொஞ்ச நாளிலேயே புறாக்கள் காணாமல் போவதற்குக் காரணம் பருந்து தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டன. எல்லாப் புறாக்களும் ஒன்று சேர்ந்து அந்தப் பருந்தை அடித்துத் துரத்தின.
கதையின் நீதி: எதிரியைக் கூடவே வைத்துக் கொண்டால், இழப்புகள் மட்டுமே மிஞ்சும்.
 
(-------------------------------------------------------------------------------------------------------)
 
 
பேராசையால் உயிரிழந்த கொக்கு
 
ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, “ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்” என விசாரித்தது.
கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, “நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே” என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.
“கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்” என்று நண்டு திகிலுடன் கேட்டது.
இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.
இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.
கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.
அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.
கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.
“என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்” என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.
கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.
மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.
கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.
ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.
கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.
கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, “நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்” என்று கேட்டது.
நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, “அதுதான் குளம்” என்று ஏளனமாகக் கூறிற்று.
மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.
மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.
நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.
நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.
கெடுவான் கேடு நினைப்பான்.
 
(-----------------------------------------------------------------------------------------------------)
 
நயவஞ்சக நரி
 
                                                 ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.
மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.
அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.
“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?” என்று கேட்டது ஆண் கழுகு.
“கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?” என்று கேட்டது.
“ஆமாம்!” “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்று கேட்டது.
“ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?” என்று கேட்டது நரி.
“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!” என்றது ஆண் கழுகு.
“ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!” என்றது நரி.
“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?” என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.
“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!” என்றது நரி.
பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!” என்றது.
ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!” என்றது.
“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!” என்றது நரி.
நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.
பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.
பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… பேஷ் பேஷ்…
“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?” என்று கேட்டது அம்மா பன்றி.
“பேஷாக தங்கலாம்!” என்றது நரி.
“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?” என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.
“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையே படாதே…! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்…! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்…! நானிருக்க பயமேன்?” என்றது நரி.
பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் “கர், கர்’ என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.
வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.
“இதோ பாருங்கள்…! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!” என்றது.
இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.
மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.
“பன்றியே…! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” என்றது நரி.
பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.
கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.
ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.
நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.
யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்
 
 
(------------------------------------------------------------------------------------------------------)
 
வெள்ளைக்கோழி
 
                                                
சொக்கி, 2 பால் மாடுகளும், ஒரு கோழியும் வளர்த்து வந்தாள். அவளுக்கு 2 பெண் பிள்ளைகள். கணவன் இறந்துவிட்டான்.அவள் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், குழந்தைகள் அவளுக்கு ஆதரவாகவும் வாழ்ந்து வந்தார்கள். பால் வருமானத்தில்தான் அவள் குடும்பம் நடந்து வந்தது. நாட்டுக்கோழி முட்டையை நாட்டு வைத்தியர் ஒருவர் அதிக விலைக்கு வாங்கி வந்தார். அதனால் கோழியையும் பொன்போல காத்து வந்தாள்.
சில நாட்களாக சொக்கிக்கு மனதில் ஒரு கவலை இருந்தது. இப்போதெல்லாம் கோழி சரியாக முட்டையிடவில்லை.கோழியை கையில் தூக்கிப் பார்த்த சொக்கி, அதன் எடையை வைத்தே கோழி முட்டையிடும் பருவத்தில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் ஏன் அது முட்டையிடவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை.
மூத்தமகள் குருவம்மாவை அழைத்த சொக்கி, `கோழியை இரை தின்று முடித்ததும் கூண்டில் அடைத்துவிடு. அது முட்டையிடுகிறதா, இல்லையா? என்பது தெரிந்துவிடும்’ என்று கூறிவிட்டு வழக்கம்போல மாடுகளைப் பற்றிக் கொண்டு காட்டிற்குச் சென்றாள்.
சரிம்மா என்ற குருவம்மா, மதிய வேளையில் வழக்கம்போல இரை போட்டதும் கோழியை கூண்டில் அடைத்தாள். ரொம்ப நேரம் காத்திருந்த குருவம்மாள், கூண்டை திறந்து பார்த்தாள். கோழி முட்டையிடவில்லை.
உடனே கோழியை திறந்துவிட்டாள். அது கொக்கரித்துக் கொண்டே சிறகடித்து ஓடியது. வீட்டின் பின்புறம் இருந்த பக்கத்து வீட்டு பங்கஜத்தின் வைக்கோல் போரில் சென்று அடைகாத்து முட்டையிட்டது. இதைக் கவனித்த குருவம்மாள், மாலையில் வீடு திரும்பிய தாயிடம் விஷயத்தைக் கூறினாள்.அப்படியானால் இத்தனை நாளும், பங்கஜம் வீட்டிற்குத்தான் முட்டைகள் போகின்றனவா? என்ற சொக்கி, அவளிடம் இதுபற்றிக் கேட்கவே தயங்கினாள்.
ஏனெனில் பங்கஜம் சரியான வாயாடி. சண்டைக்கு அஞ்சமாட்டாள். வாய்க்கு வந்தபடி பேசுவாள் தூஷண வார்த்தைகள் சரமாரியாய் வந்துவிழும். கேட்கவே காது கூசும்.
அதனால் அவளிடம் முட்டைகள் பற்றி கேட்பதற்குப் பதிலாக இனிமேல் கோழியை அங்கே போகவிடாமல் தடுப்பதே சிறந்தது என்று எண்ணினாள்.உறவினர் ஒருவரிடம் கொஞ்சம் வைக்கோல் கடனாகப் பெற்று வந்தாள். அதை கோழிக்கூண்டில் பரத்தி வைத்தாள்.மறுநாள் இரை போட்டு கோழிகளை கூண்டில் அடைத்தாள் குருவம்மாள். அப்போதும் முட்டையிடவில்லை.
கூண்டை திறந்து விட்டதும், வழக்கம்போல் வைக்கோல் போரில் சென்று முட்டையிட்டது. இதுபற்றி தாயிடம் கூறினாள் குருவம்மாள்.அப்படியா சங்கதி என்ற சொக்கி, மறுநாள் வெள்ளைக் கோழியை அடித்து குழம்பாக்கிவிட்டாள். தாயும், மகள்களும் கோழிக்குழம்பை வயிறு முட்ட சாப்பிட்டார்கள்.சாப்பிட்டுக் கொண்டிருந்த சொக்கி திடீரென்று அதிர்ச்சி அடைந்தாள். ஏனெனில் வெள்ளைக் கோழி முற்றத்தில் வந்து நின்றது.அதன்பிறகுதான் தங்கள் வெள்ளைக் கோழி என்று எண்ணி, பங்கஜத்தின் வெள்ளைக் கோழியை அடித்து குழம்பு வைத்துவிட்டதை எண்ணி சொக்கி அதிர்ச்சியானாள்.பிறகு என்ன செய்வது என்று புரியாமல் மீண்டும் தன்னுடைய வெள்ளைக் கோழியையும் அடித்து குழம்பு வைத்தாள். ஆத்திரம் கண்ணை மறைத்ததை அறிந்து வெட்கப்பட்டாள்


(--------------------------------------------------------------------------------------------------)

தற்பெருமை

                                                 ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்கு தன்னுடைய பலத்தின் மீது மிகுந்த பெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் அந்த காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்படுத்தியது. இதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் ஆண்டவரிடம் அழுது புலம்பின. உடனே ஆண்டவர் ஒரு சிறிய கொசுவை கொண்டு சிங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்பினார்.ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றி சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
“”யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?” என்று உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென நகைத்து, “”சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு,” என்றது.
நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று சிங்கம் கேட்டது.
“”நான் உங்களிடம் சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத் தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்,” என கொசு சவால் விட்டது.
“”உனக்கு என்ன திமிர்? அற்ப ஜந்துவாகிய நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்? நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே,” என்று கூறியவாறே சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத் தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு சிங்கம் நிம்மதியாகப் படுத்தது. ஆனால் கொசு மறுபடியும் வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள முடியவில்லை. ஆகவே மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாக சிங்கத்தை ஏமாற்றி அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும், கொசுவும் போராடின. அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தது. கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம் சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி ஏளனச் சிரிப்புச் சிரித்தது. “”மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக் கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான் பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு அரசன்,” என்று வெற்றி முழக்கம் இட்டது. சிங்கம் வெட்கி தலை குனிந்தது.
நீதி: பெருமை என்பது இருக்கக் கூடாது. பெருமை உள்ளவர்களுக்கு உடனே அழிவு வரும். தாழ்மையுடன் நடந்துக் கொள்பவர்களை ஆண்டவன் உயர்த்துவார்
(-------------------------------------------------------------------------------------------------)

அறிவாளி குரங்கு!
 

                                                 அந்த தோப்பில் மா, தென்னை, வேம்பு, பலா, தேக்கு, வாகை, பூவரசு எனப் பலவகையான மரங்கள் இருந்தன. எனினும் மாமரமும், தென்னையும் அவற்றுள் மிகுதியாகப் காணப்பட்டன.
வேலி அடைக்கப் படவில்லை. நான்கு புறங்களும் திறந்தே கிடந்தன. யார் யாரோ வளர்க்கும் ஆடுமாடுகள் வரும், புல்லை மேயும், சென்றுவிடும். அங்கே, கிளி, சிட்டு, காகம் போன்ற பறவைகளும் குரங்கு, மான் போன்ற விலங்குகளும் ஓணான், உடும்பு, அணில் போன்ற சிற்றுயிர்களும் ஏராளமாக வாழ்ந்து வந்தன.
படர்ந்து கிளை பரப்பி நின்ற மாமரத்தின் அருகில் நின்றிருந்த தென்னை மரத்திற்கு, அன்றைக்கு என்ன வந்ததோ தெரியவில்லை. சற்று வாய்கொழுப்புடன் பேசிக் கொண்டிருந்தது.
“”இதோ பார்…உன்னை விட நானே உயர்ந்தவன்!” என்று தலையை உலுக்கிக் சொன்னது.
“யாராவது எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டுமே நமக்கென்ன போச்சு…’ என்று மாமரம் வாயை மூடிக்கொண்டு சும்மா கிடக்கவில்லை. வலுச்சண்டைக்குப் போகக் கூடாது. வந்த சண்டையை விடக்கூடாது; என்பது அதன் கொள்கை.
“”நான்தான் உன்னைவிட உயர்ந்தவன்,” என்றது மாமரம்.
“”என்னுடைய உயரம் என்ன? உன்னுடைய உயரம் என்ன? பார்த்தாலே தெரியுமே! உனக்குக் கண் இல்லை. அதனால் தெரியவில்லை!” என்று மீண்டும் தென்னை மரம் குரல் உயர்த்தியது.
“”நோஞ்சானைப் போல் ஒல்லியாக உயர்ந்து நின்றால் மட்டும் போதுமா? என்னைப் போல் நூற்றுக்கணக்கில் கிளை பரப்பி இலை தழைகளோடு காய்கனிகளைத் தாங்கி நிற்க வேண்டாமா?” என்று தென்னையின் மூக்கறுப்பது போல் கூறியது மாமரம் .
“”நானும்தான் இளநீர்க் குலைகளைக் சுமந்திருக்கிறேன். ஆண்டு முழுவதும் தேங்காய்களைக் கொடுப்பவன் நான். நீ ஆண்டில் சில மாதங்களே மாங்காய்களைக் கொடுக்கிறாய். உன்னைவிட நானே உயர்ந்தவன்!” என்றது தென்னை.
“”நான் வெயிலில் களைத்து வருவோர்க்கு நிழல் கொடுப்பேன். உன்னால் முடியாது. அது மட்டுமா? முக்கனிகளுள் ஒன்றாக என்னைத்தான் வைத்துள்ளனர்!” என்று மாமரம் விடாமல் பதிலுக்குப் பதில் பேசியது.
“”உன்னால் நிழல்தான் கொடுக்க முடியும். குடியிருக்கும் வீடுகளுக்குக் கூரையாக அமைந்து வெயில், மழை, காற்றிலிருந்து மக்களைக் காப்பேன். அது மட்டுமோ? இறைவனை வழிபட என் தேங்காய்களைத்தான் பயன்படுத்து கின்றனர். முக்கனி என உன்னைச் சொல்வதற்காகப் பீற்றிக் கொள்ளாதே!” எனத் தென்னை சொல்லிவிட்டு வானத்தை, அண்ணாந்து பார்த்தது.
அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருவன், தென்னை மரத்தில் விடுவிடுவென வேகமாக ஏறினான். அதன் கழுத்துப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்க் குலைகள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்துவிட்டுக் கீழே இறக்கினான். சிதறிக் கிடந்த தேங்காய்களையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டுக் கட்டினான்.
அதைக் கண்ட மாமரத்திற்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி. இனிமேலாவது தென்னை மரத்தின் கொழுப்பு அடங்கும் என, எண்ணி எகத்தாளமாய்த் தென்னையை அண்ணாந்து பார்த்தது.
தென்னைக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தது; கீழே பார்க்கவில்லை.
சற்று நேரம் மாமரத்தின் நிழலில் இளைப்பாறிய அந்த மனிதன் களைப்பு நீங்கி எழுந்தான். எழுந்த வேகத்தில் மாமரத்தில் ஏறினான். ஒரு கிளை விடாமல் அத்தனை கிளைகளுக்கும் தாவி, அங்கே கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த மாங்காய்களைப் பறித்துப் போட்டுவிட்டுக் கீழே இறங்கினான்.
எல்லா மாங்காய்களையும் பொறுக்கினான். இரண்டு கோணிப்பை தேறியது.
அதுவரை வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னை மரம், இப்போது மாமரத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டது.
நமக்கு வந்த துன்பம், பக்கத்து வீட்டுக்காரனுக்கும் வந்தால் ஒருவித ஆறுதல் கிடைக்குமே! அந்த ஆறுதல் தென்னைக்குக் கிடைத்தது; மாமரமோ சோகத்தில் மூழ்கிக் கிடந்தது.
அந்த மனிதன் இரண்டு மூட்டை மாங்காய்களையும், ஒரு மூட்டை தேங்காய்களையும் ஒரு கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அவன் புறப்பட்டுச் சென்றதைத் தென்னை மரமும், மாமரமும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நின்றன.
அப்போது கலகலவென சிரிப்பொலி கேட்டது. சிரிப்போலி வந்த திசையில் தென்னை மரமும், மாமரமும் பார்வையைச் செலுத்தின. எதிரே இருந்த பலா மரத்தில் கிடந்த பலாப்பழத்தைத் தின்று கொண்டிருந்த குரங்கு சிரித்தது என்பதை உணர்ந்து கொள்ள அவ்விரண்டிற்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை.
“”குரங்கே…! ஏன் அப்படி எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாய்?” என மாமரம் அழுகையுடன் கேட்டது.
“”சற்று முன் நீங்கள் இருந்த நிலையையும் இப்போது நீங்கள் இருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தேன்; சிரிப்பு வந்தது. அதனால் சிரித்துவிட்டேன்!” என்று குரங்கு சொன்னது.
“”நாங்கள் எப்படி இருந்தோம். பெரிசா கண்டு பிடிச்சிட்டே?”என்று தென்னை கேலியாகப் பேசிற்று.
“”ஒரே இடத்தில் இருக்கும் நீங்கள் ஒற்றுமையாக இருக்காமல் நீ பெரியவனா? நான் பெரியவனா? என வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருந்தீர்களே, இப்போது தெரிகிறதா யார் பெரியவன் என்று? உங்கள் இருவரையும் மொட்டை அடித்துத் தேங்காய்களையும், மாய்காய்களையும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு போகின்றானே ஒரு குள்ள மனிதன், அவன்தான் உங்கள் இருவரைக் காட்டிலும் உயர்ந்தவன். உலகத்தில் யாருமே பெரியவர்களும் இல்லை; யாருமே சிறியவர்களும் இல்லை. அவரவர் உண்டான பணியினை அவரவர் செய்தாலே போதும்! நீ பெரியவனா நான் பெரியவனா என போட்டி போடாமல் வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற உண்மையை எண்ணிப் பார்க்கவேண்டும்,” எனச் சொன்னது குரங்கு.
“”நீ தூக்கணாங்குருவியின் கூட்டைப் பிய்த்தெறிந்த கதை எங்களுக்கு தெரியாதா… நீ என்ன பெரிய ஒழுங்கா?”
“”தூக்கணாங் குருவியின் வாழ்க்கை முறை வேறு; என்னுடைய வாழ்க்கை முறை வேறு,” என்றது குரங்கு.
“”பின் ஏன் பிரித்தெறிந்தாய்?” கேட்டது மாமரம்.
“”தூக்கணாங் குருவிக்குத் திமிர் அதிகம். ஆணவம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கூட்டைக் கட்டி குடியிருந்ததால் உலகத்தில் தானே புத்திசாலி என்றும், மற்றவர்கள் எல்லாம் உருப்படாதவர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தது. கூடியவரை அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பதே நல்லது. எனக்குப் புத்தி சொல்லுகின்ற அளவிற்குத் தூக்கணாங் குருவிக்குக் கொழுப்பு தலைக்கேறியிருந்தது. அந்தக் கொழுப்பை அடக்கத்தான் அப்படிச்செய்தேன்!” என்றது குரங்கு.
“”நீ என்ன சொல்கிறாய்?” என்று தொடர்ந்து மாமரம்.
“”கூடு கட்டத் தெரிந்த குருவிக்குக் காக்கத் தெரியவில்லை! கட்டுவதில் அதற்குப் பலம் என்றால் எனக்கு இன்னொரு வகையில் பலம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்கத்தான் அவ்வாறு செய்தேன்!” என்று சொல்லிக்கொண்டே வேறொரு மரத்திற்குத் தாவிச் சென்றது குரங்கு.
குரங்கின் புத்திசாலித்தனத்தை எண்ணி ஆச்சரியமடைந்தது தென்னையும், மாமரமும்.
(----------------------------------------------------------------------------------------------------)
 
தங்க வாத்தும் பாதி அப்பமும்!
                                                

  • வெகு காலத்துக்கு முன்பு, ஸ்காட்லாந்தில் ஒரு விவசாயி இருந்தான். அவன் பெயர் வில்ஃப்ரெட். வாத்துகளை வளர்ப்பது அவனது தொழில். வாத்துகளையும் முட்டைகளையும் விற்பான். ஒரு முறை, ஒரு வாத்து அடைகாத்த முட்டை ஒன்று உடைந்து, வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. அதைப் பார்த்து வியப்படைந்தான் வில்ஃப்ரெட். அந்த வாத்துக் குஞ்சு தகதகக்கும் தங்க நிறத்தில் இருந்தது.
    ”ஆ! இந்த வாத்துக் குஞ்சு அதிசயமான பிராணிதான்!” என்று உறுதியாக நம்பினான் வில்ஃப்ரெட். அதனால், அதை மிகவும் கவனமாக வளர்த்தான். அவனது நம்பிக்கை வீணாகவில்லை. வாத்துக் குஞ்சு வளர்ந்து, பெரிய தங்க வாத்து ஆனது. அது, தங்க முட்டை இட்டது. அப்போது நண்பன் பீட்டர் அங்கே வந்தான். ”எல்லாம் உன் அதிர்ஷ்டம்தான் வில்ஃப்ரெட்!” என்ற பீட்டர், ”சிறப்பான இத்தகைய அரிய பிராணிகளும் பொருட்களும் ராஜாவுக்கு உரிமையானவை. அதனால், நீ இந்த வாத்தை ராஜாவிடம் கொடுத்துவிடுவதுதான் நல்லது. அவர் உனக்குப் பரிசுகள் தருவார்!” என்றான்.பீட்டர் சொல்வது சரிதான் என்று வில்ஃப்ரெட்டுக்குத் தோன்றியது. அவன், வாத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டான்ஒரு பெரிய காட்டைக் கடந்துதான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். படை வீரர்களால் தேடப்பட்டு வரும் ஒரு கொள்ளைக்காரன் அந்தக் காட்டில்தான் இருந்தான். பாங்கோ என்று அவன் பெயரைச் சொன்னாலே, எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். எனவே, வில்ஃப்ரெட் பயந்து பயந்து காட்டு வழியே சென்றான். அப்போது அவன் முன்னால் பாய்ந்து வந்து நின்றான் பாங்கோ.
    ”அடேய்! உன்னிடம் இருக்கும் பணத்தை எடு!” என்று இரட்டைக் குழல் துப்பாக்கியை நீட்டினான்.
    ”என்னிடம் பணம் இல்லை. ஒரே ஒரு வாத்துதான் இருக்கிறது. இதை ராஜாவிடம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிறேன். வாத்தை என்னிடம் இருந்து பறித்துக்கொண்டால், ராஜா உன்னைத் தண்டிப்பார்!” என்றான் வில்ஃப்ரெட்.
    அதைக் கேட்ட பாங்கோ, ‘இவன் சொல்வது சரிதான். இந்த வாத்தைப் பிடுங்குவதால் என்ன பயன்? தேவை இல்லாமல் ராஜாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். அதற்குப் பதிலாக, இவனுக்கு ராஜா கொடுக்கிற பரிசுகளைப் பறித்துக்கொள்ளலாம்!’ என்று நினைத்தான்.
    பாங்கோ துப்பாக்கியை அகற்றிவிட்டுச் சொன்னான், ”உன்னை நான் சும்மா விடுகிறேன். ஆனால், ராஜா தருகிற பரிசில் பாதியை எனக்குத் தர வேண்டும்!”
    ”நிச்சயம் தருகிறேன்!” என்று வில்ஃப்ரெட் சம்மதித்தான். பிறகு, வாத்துடன் அரண்மனைக்குச் சென்றான். தங்க வாத்தைக் கண்டு ராஜா பெரிதும் வியந்தார்.
    ”யாரங்கே? இந்த அற்புதமான பரிசைக் கொண்டுவந்த இவருக்கு, அருமையான விருந்து கொடுங்கள்!” என்று கட்டளை இட்டார்.
    விருந்து முடிந்த பிறகு, வில்ஃப்ரெட்டுக்கு விலை உயர்ந்த பரிசுகள் தரச் சொன்னார் ராஜா. அப்போது வில்ஃப்ரெட், ”ராஜாவே… எனக்கு ஒரு அப்பம் மட்டும் போதும். அதுவும் ஒரு பகுதியில் மயக்க மருந்து கலந்து செய்த அப்பம்!” என்றான்.
    ராஜா அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அவன் கேட்டவாறு அப்பத்தைத் தயாரித்துக் கொடுத்தார்கள். வில்ஃப்ரெட் நேராக பாங்கோவிடம் வந்து சொன்னான், ”ராஜா எனக்கு இந்த அப்பம் மட்டும்தான் கொடுத்தார். இதில் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்!”
    வில்ஃப்ரெட் அப்பத்தின் நல்ல பகுதியைப் பிட்டுத் தின்றான். மிச்சத்தை பாங்கோவிடம் கொடுத்தான். சினம் கொண்ட பாங்கோ, வில்ஃப்ரெட்டை சோதனையிட்டான். அவன் எதையும் ஒளித்துவைத்து இருக்கவில்லை என்பது உறுதிப்பட்டது. ஏமாற்றம் அடைந்த பாங்கோ ஏற்கெனவே பசியில் இருந்ததால், பாதி அப்பத்தை ‘இதுவாவது கிடைத்ததே’ என்று நினைத்தபடி தின்று முடித்தான். தலை சுற்றியது உடனடியாக மயங்கிக் கீழே விழுந்தான்.
    வில்ஃப்ரெட் காத்திருந்தது இதற்குத்தானே.
    பாங்கோவைத் தூக்கிக்கொண்டு விரைவாக அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான். நடந்ததை எல்லாம் ராஜாவிடம் தெரிவித்தான். படை வீரர்கள் பாங்கோவைப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள். அறிவாளியான வில்ஃப்ரெட்டுக்கு ராஜா, மதிப்பு உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
(---------------------------------------------------------------------------------------------------------)

சொல்
                                                 ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான்.நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்தச் சுவரில் அடிக்கவும் என்றான். இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30, மறுநாள் 25 எனப் படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப்பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட நண்பன் அவனிடம் அடித்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னான். இளைஞனும் அப்படியே செய்தான். அதைப்பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே… நீ, நான் சொன்னபடியே எல்லா வேலைகளை யும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார். இந்தச் சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே… உண்மையைச் சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர உன்னைத் தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதைக் காது கொடுத்து கேட்பார்கள். நீ நல்ல நிலைக்கு வரும் போது உன்னைப் புகழ்வார்கள். அதையும் இதயப் பூர்வமாகச் செய்வார்கள். அதைத்தான் நான் இப்போது செய்தேன்.
நீதி : தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
 
(-------------------------------------------------------------------------------------------------)
 
ஆப்பிள் அழகி!
                                                

சுந்தரபுரம் என்ற நாட்டை அனந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்து மகன்கள். அவர்களுள் நான்கு பேருக்கு திருமணம் முடிந்தது. ஐந்தாவது இளவரசன் அறிவு, வீரம், அழகு எல்லாவற்றிலும் மிகவும் சிறந்து விளங்கினான். அதனால் அரசருக்கு அவன் மேல் விருப்பம் அதிகம். எங்கே அந்த மகனிடம் அரச பதவியை கொடுத்துவிடுவாரோ என பயந்தனர் மற்றவர்கள். இதனால் அவன் மீது பொறாமைக் கொண்ட அண்ணிகள், “ஆப்பிள் அழகி என்ற உலகிலேயே சிறந்த அழகி ஒருத்தி உண்டு. அவளை நீ மணந்து வா!” என்று சொல்லி ஏத்தி விட்டனர்.அவள் எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் இளவரசன். “அதான் யாருக்குமே தெரியாதே!” என்றனர் அண்ணிகள். “நான் அவளை திருமணம் செய்துக் கொண்டு தான் இங்கே வருவேன்,” என்று சொன்னான் இளவரசன். அண்ணிகளோ, “நீ அவளை திருமணம் செய்து கொண்டு வந்தால் நாங்கள் உனது அடிமைகள்!” என்று கூறினர்.
அதைக் கேட்ட இளவரசன் தன் வாளுடன் காட்டை நோக்கி நடந்தான். அப்போதுதான் அவன் எப்படியாவது ஒழிந்து போவான்… என நினைத்தனர். அரசரும் “உலகிலேயே யாரும் அடைய முடியாத ஆப்பிள் அழகியை மணந்து வந்தால் இந்த நாட்டுக்கு நீதான் அரசன்,’ என்றார். காரணம்! ஆப்பிள் அழகி சிரித்தாலோ வைரக் கற்கள் கொட்டும். அவற்றை கொண்டு நாட்டை செழிப்பாக்கி விடலாம் என நினைத்தார் அரசர்.
அண்ணிகளோ, “இளவரசனால் ஆப்பிள் அழகியை பார்க்கவே முடியாது. ஏனெனில், அவள் எங்கே இருக்கிறாள் என்று யாருக்குமே தெரியாது! இதோடு இவன் ஒழிந்தான்!’ என்று நினைத்தனர். இளவரசன் காட்டின் நடுவில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தான். அந்த மரத்தில் ஒரு பருந்து கூடு கட்டி வைத்திருந்தது. அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அது இரை தேட செல்லும் பொழுது ஒரு நாகம் தினமும் அது இடும் முட்டைகளை குடித்துவிட்டுச் செல்லும். அன்று பருந்தின் குஞ்சுகள் நான்கை கொல்லப் போனது. குஞ்சுகள் கத்துவது இளவரசன் காதில் விழுந்தது; கோபம் வந்தது. உடனே குஞ்சுகளை கொல்வதற்கு தன் வாளுடன் மேலே பார்த்தான். அங்கே பாம்பு, குஞ்சுகளை கொல்லப் போவதைப் பார்த்தான். உடனே பாம்பை கொன்று குஞ்சுகளை காப்பாற்றினான். அதைப் பார்த்து பருந்துகளின் குஞ்சுகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தன.
“அண்ணே நீங்கள் யார்?” என்று கேட்டன பருந்து குஞ்சுகள். இதைக் கேட்டதும் இளவரசன் அசந்துப் போனான். ஆப்பிள் அழகியை திருமணம் செய்யச் செல்வதாக கூறினான் இளவரசன். இதைக் கேட்ட பருந்து குஞ்சுகள், “”நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. எங்கள் அம்மா, அப்பாவால் தான் முடியும். நாங்கள் சொல்லி உதவி செய்கிறோம். நீங்கள் அந்த செடிகளில் ஒன்பதாவது செடியின் பின் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். நாங்கள் சொன்னால் மட்டுமே நீங்கள் வெளியே வர வேண்டும். எங்கள் அம்மா, அப்பாவிற்கு கோபம் வந்தால் உங்களையும் கொன்றுவிடுவர். அதனால்தான் சொல்லுகிறோம்,” என்றன.
அதைக் கேட்ட இளவரசன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று ஒளிந்துக் கொண்டான். பருந்துகள் கூட்டிற்கு வந்தன. தன் குஞ்சுகள் உயிரோடு இருப்பதையும், முட்டைகள் உடைந்து கிடப்பதையும், பாம்பு துண்டு, துண்டாக கிடப்பதையும் பார்த்து பருந்து இரண்டும் சந்தோஷத்துடன் தன் குஞ்சுகளிடம் கேட்டன.
உடனே ஒரு குஞ்சு நடந்ததை சொன்னது. “”அவன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டன.
“அம்மா நீங்கள் எங்களுக்கு பிராமிஸ் பண்ணுங்க. எங்கள் உயிரை காப்பாற்றியவருக்கு ஒரு உதவி செய்வோம் என வாக்குறுதி கொடுத்தால் நாங்கள் அவரை உங்களுக்கு காண்பிப்போம்,” என்றன.
“சரி!” என சொல்யதும். குஞ்சுகள் உடனே, “”அண்ணா இங்கே வாருங்கள்!” என அழைத்தன. அதுவரை நடந்தவற்றை பொருமையாக பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் வெளியே வந்து பருந்துகளை வணங்கினான்.
“உனக்கு என்ன வேண்டும் சொல்!” என்றன. உடனே இளவரசன் அரண்மனையில் நடந்தவற்றை கூறினான். உடனே கழுகுகள் அந்த ஆப்பிள் கன்னி ஏழு மலைகளைத் தாண்டிச் சென்றால் அழகிய தங்க ஆப்பிள் தோட்டம் வரும். அதன் நடுவில் ஒரு மரம் இருக்கும். அதில் இறக்கிவிடுவேன். அந்த மரத்தை மூன்று சுற்று சுற்ற வேண்டும். முதல் சுற்றில் ஒரு கனியை பார்க்க வேண்டும், இண்டாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பார்க்க வேண்டும். மூன்றாம் சுற்று சுற்றும் பொழுது ஒரு கனியை பறிக்க வேண்டும். அந்தக் கனியை அரண்மனைக்கு எடுத்து சென்று பிய்த்து பார்த்தால் அதில் ஆப்பிள் கன்னி இருப்பாள்.
“அந்த ஆப்பிளை பறிக்கும் போது அந்த தோட்டத்தின் உரிமையாளன் கொம்பேரி பாம்பு முகத்தையுடைய பாம்பு ராட்சஷன் உன்னை கொத்த வருவான். நீ இந்த நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தவுடனே அவன் இறந்து போவான்,” என்றது.
இதைக் கேட்ட இளவரசன் சரி என்றான். இளவரசன் அந்த மரத்தை பார்த்து விட்டு சுற்றத் தொடங்கினான். முதல் சுற்றில் ஒரு கனியை பார்த்தான். இரண்டாம் சுற்றில் பருந்து சொன்னது போல் பாம்பு முகத்தைக் கொண்ட ராட்சஷன் ஓடி வந்தான். நாகக்கல்லை அவன் மீது தூக்கி எறிந்தான். ராட்சஷன் “ஆ’ என அலறியபடியே மடிந்து போனான். மூன்றாம் முறை மரத்தை சுற்றியதும் தங்க நிற ஆப்பிள் ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது. உடனே பருந்து அவனை தன் முதுகில் ஏற்றி வந்து அவனது நாட்டில் விட்டது.
மறுநாள் அரசனை வணங்கிய இளவரசன் அந்த தங்க ஆப்பிளை காண்பித்தான். அதன் அழகில் மயங்கினர். அதன் அழகில் மயங்கிய அண்ணிகள், “அது எனக்கு வேண்டும்!’ என கெஞ்சினர். ஆனால், இளவரசனோ ஆப்பிளை இரண்டாகப் பிளந்தான். அதிலிருந்து தங்கச்சிலை போல் ஆப்பிள் அழகி வெளியே வந்தாள். அவள் அரசனை வணங்கி இளவரசனின் கரத்தைப் பிடித்தாள். அப்படியே அதிர்ந்தனர் அனைவரும். கலகலவென சிரித்தாள்.வைரங்கள் கொட்டின, அசந்து போன அண்ணிகளும், அண்ணன்களும் தன் தம்பிக்கு கிடைத்த ஆப்பிள் அழகியை எண்ணி பொறாமைக் கொண்டனர். அரசன் தன் மகனுக்கு முடிசூட்டி ஆப்பிள் அழகியை அரசியாக்கி மகிழ்ந்தான். பிறகு இருவரும் சிறப்பாக நாட்டை ஆண்டனர்
 
(--------------------------------------------------------------------------------------------------------)
 
அதிசய மோதிரம்!
                                                

முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் ஒருநாள்…. தேவதை ஒன்று அவனிஅடுத்த நாளே, அந்த ஏழை விவசாயி கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்த கோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தை ஓங்கி வெட்டினான். அது தரையின் மீது விழும் போது, அதன் முனைப் பகுதியில் இருந்து ஒரு பறவைக் கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.
விழுந்த வேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடி உடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒரு கழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொரு முட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்து உருண்டோடியது. கழுகுக் குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப் பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் கழுகு தனது சிறகை அடித்துப் பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.
அடுத்த முட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமான அதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும் அது கொடுக்கும். ஆனால், அதை ஒரே ஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புத சக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர் வருத்தப்பட நேரிடும்,” என்று கழுகு சொல்லிவிட்டு உயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.
நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?” என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒரு புல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,” என்று கூறினான்.
நகை வணிகர் கூறியதைக் கேட்ட விவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்த மோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது,” என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.
விவசாயி கூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையை அறிந்து கொண்ட நகை வணிகனின் உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டம் போட்டான்.
விவசாயியிடம் வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனது வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்,” என்று கூறினான். விவசாயியுடம் வந்தது.
அந்தத் தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில் அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு விடிவு காலம் வருமாறு வழிவகை செய்ய வேண்டுமென்றும், தேவதையிடம் வேண்டிக் கொண்டான்.
“நான் சொல்கிறபடி செய்…. நேராக இதோ எதிரே தெரியும் காட்டுக்குள் செல். அங்கு பல வகையான மரங்கள் உள்ளன. அவற்றில் எல்லா மரங்களையும் விட ஒரு மரம் உயரமாக வளர்ந்து நிற்கும். அந்த மரத்தின் பெயர் பைன் மரம். அதை அப்படியே வெட்டிப் போடு. அப்புறம் அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வரும். உன் கஷ்டங்கள் எல்லாம் தீரும்,” என்று அந்த தேவதை ஏழை விவசாயிக்கு வழிகாட்டியது.
அடுத்த நாளே, அந்த ஏழை விவசாயி கையில் கோடாரியை எடுத்துக் கொண்டு காட்டை சென்றடைந்தான். காட்டுக்குள் இருந்த பைன் மரத்தைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் அங்குமிங்கும், தேடி அலைந்தான். இறுதியில் ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த பைன் மரத்தைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, தனது கையிலிருந்த கோடாரியால் பைன் மரத்தின் அடிப்பாகத்தை ஓங்கி வெட்டினான். அது தரையின் மீது விழும் போது, அதன் முனைப் பகுதியில் இருந்து ஒரு பறவைக் கூடும் விழுந்தது. அக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருந்தன.
விழுந்த வேகத்தில் அந்த முட்டைகள் உருண்டோடி உடைந்தன. ஒரு முட்டையிலிருந்து ஒரு கழுகுக் குஞ்சு வெளிப்பட்டது. இன்னொரு முட்டையிலிருந்து, ஒரு மோதிரம் வெளிவந்து உருண்டோடியது.
கழுகுக் குஞ்சு பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. அந்த விவசாயியின் பாதியளவுக்குப் பெருத்து விட்டது. இந்தக் காட்சியைக் கண்டு விவசாயிக்கு ஒரே ஆச்சரியம். அவனால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்தக் கழுகு தனது சிறகை அடித்துப் பறக்கும் முன் விவசாயியைப் பார்த்து, “எனது அடிமைத்தளத்திலிருந்து எனக்கு விடுதலை அளித்துவிட்டீர்கள். உங்களுக்கு எனது நன்றி.
அடுத்த முட்டையிலிருந்து வெளிவந்துள்ள மோதிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஓர் ஆச்சரியமான அதிசய மோதிரம். நீங்கள் எதைக் கேட்டாலும் அது கொடுக்கும். ஆனால், அதை ஒரே ஒரு தடவை பயன்படுத்தி விட்டால், அது சாதாரண மோதிரம் ஆகிவிடும். இதுதான் அந்த மோதிரத்தின் அற்புத சக்தியாகும். எனவே, ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள். அசட்டையாய் இருந்து விட்டால், பின்னர் வருத்தப்பட நேரிடும்,” என்று கழுகு சொல்லிவிட்டு உயரே பறந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் விவசாயி. அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில், அங்குள்ள நகைக் கடைக்குச் சென்றான்.
நகை வணிகரிடம் அந்த மோதிரத்தைக் காட்டி, “இதன் மதிப்பு என்ன இருக்கும்?” என்று கேட்டான். மோதிரத்தை வாங்கிப் பார்த்த நகை வணிகர், “இதற்கு ஈடாக யாரும் ஒரு புல்லுக்கட்டு கூடத் தரமாட்டார்,” என்று கூறினான்.
நகை வணிகர் கூறியதைக் கேட்ட விவசாயி சிரித்துக் கொண்டே அவரிடம், “இந்த மோதிரத்தின் மகிமையைப் பற்றி உனக்கு தெரியாது. உலகத்திலுள்ள எல்லா மோதிரங்களையும் சேர்த்தாலும் இதன் மதிப்புக்கு ஈடாகாது,” என்று கூறிய விவசாயி, அந்த மோதிரம் தனக்கு எப்படிக் கிடைத்தது என்றும் விளக்கமாகக் கூறினான்.
விவசாயி கூறியதைக் கேட்டு, மோதிரத்தின் மகிமையை அறிந்து கொண்ட நகை வணிகனின் உள்ளத்தில் பேராசை தலை தூக்கியது. அவன் அந்த மோதிரத்தை அபகரிக்க திட்டம் போட்டான்.
விவசாயியிடம் வணிகர் மிகவும் கனிவாக, “ஐயா, நீங்கள் இன்று இரவு எனது வீட்டில் தங்கிவிட்டு, நாளை காலையில் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம்,” என்று கூறினான். விவசாயியும் அதற்குச் சம்மதித்தார்.
அன்று இரவு விவசாயிக்கு நல்ல அறுசுவை விருந்து. விருந்தின் முடிவில் திராட்சை ரசம் வேறு. அதை வாங்கிக் குடித்த விவசாயி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தான்.
அந்த சமயம் பார்த்து விவசாயியின் கையிலிருந்த மோதிரத்தை திருடிக் கொண்டு, ஒரு சாதாரண மோதிரத்தை மாட்டிவிட்டான் வணிகன்.
விவசாயி நன்றாகத் தூங்கினான். “மோதிரத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பணக்காரனாக ஆகி விடலாம்’ என்று எண்ணி ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் வணிகன்.
மறுநாள் பொழுது விடிந்தது. சிறப்பான விருந்து கொடுத்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு, நகை வணிகனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான் விவசாயி.
நகை வியாபாரியோ, அந்த மாய மோதிரத்தைக் தன் கை விரலில் அணிந்துகொண்டு, ஒய்யாரமாகத் தன் இருக்கையில் அமர்ந்தவாறே, மாய மோதிரத்தைப் பார்த்து, “எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் வேண்டும்,” என்று கேட்டான்.
மோதிரம் தனக்குள்ளாக, “அடப்பாவி! ஒரு அப்பாவி ஏழையை ஏமாற்றி, அவனிடமிருந்து என்னைத் திருடி, என் மூலம் உலகப் பணக்காரன் ஆகப் பார்க்கிறாயா? இதோ, உன் கதையை இப்போதே முடித்து விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டது.
நகை வணிகன் கேட்டுக் கொண்ட மாதிரியே, அந்த மோதிரம் தங்கக் காசுகளை அவனது தலையில் மழைபோல் பெய்து கொண்டிருந்தது.
தங்கக் காசுகள், “பட் பட்’ என்று அவனது தலை மீது விழுந்தன.
“தலை வலிக்கிறது, போதும் போதும்!” என்று கத்தினான். ஆனால், தங்க மழை நின்றபாடில்லை.
கடைசித் தங்கக் காசு அவனது தலையில் விழுந்தவுடன் தங்க மழை ஓய்ந்து போனது.
ஆனால், விழுந்து கிடந்த தங்கக் காசுகளை அந்த வணிகனால் எடுக்க முடியவில்லை. காரணம், தங்க மழை ஓய்வதற்கு முன்பே, அவனது உடலை, விட்டு அவனது உயிர் போய் விட்டது.
தங்க மழை பெய்ததால், நகை வியாபாரி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது.
நகை வியாபாரியின் வீட்டை நோக்கி ஓடினர். நகை வியாபாரி மீது தங்கக் காசுகள் குவிந்து கிடந்தன.
“இப்படி மழைபோல் தங்க காசுகள் வந்தால், தீமையும் வராமலா போய் விடும்’ என்று வந்தவர்கள் பேசிக்கொண்டனர். பின்னர் ஆளுக்கு இரண்டு தங்கக் காசுகள் எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை நோக்கிச் சென்றனர்.
பின்னர் நகை வியாபாரியின் கைவிரலில் இருந்த அந்த மாயமோதிரம் தானே கழன்று, அந்த விவசாயியின் வீட்டை நோக்கி பறந்து சென்றது.
 
(----------------------------------------------------------------------------------------------------)
 
பூதம் சொன்ன கதை
                                               
முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.
அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான்.
“போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.
அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.
பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.
அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…” என எண்ணி மனம் புழுங்கினான்.
அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.
அதைக் கண்டு திகைத்தான் அமுதன். “இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?” என எண்ணி ஆச்சரியப்பட்டான்.
அப்போது, “அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.
“அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…” என்று சொல்லி மறைந்தது.
அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
 
நன்றி   இணையதளம்                                                                         கமருதீன் 

No comments:

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்