b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 27 August 2012

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்

சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.


மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.


மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.




பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் Pierre Jules César Janssen பெப்ரவரி 22 1824 – டிசம்பர் 23 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.




ரோலண்ட் ஹில் (Rowland Hill டிசம்பர் 3 1795 - ஆகஸ்ட் 27 1879) நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.



தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11 1847 – அக்டோபர் 18 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'மென்லோ பூங்காவின் மந்திரவாதி' பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1920களின் பிற்பகுதிகளில்இ தன்னுடைய மின்விளக்கு கண்டுபிடிப்பு. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் Edison Trust எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5 1950 - டிசம்பர் 2 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு பனிக்கட்டி பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.


அலெசான்றோ வோல்ட்டா (1745-1827) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18 1745ல் பிறந்தார். 110 வோல்ட்டு மின் அழுத்தம் 230 வோல்ட்டு மின் அழுத்தம் என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும்இ நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter)என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.


கார்ல் பென்ஸ் (நவம்பர் 25 1844 - ஏப்ரல் 4 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.



ஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.




சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (ஜனவரி 9 1868 - பிப்ரவரி 12 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் ph (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர். இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.




மார்க்கோனி (ஏப்ரல் 25 1874 - ஜூலை 20 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். 'வானொலியின் தந்தை' எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முயசட குநசனiயெனெ டீசயரn இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.



ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


லூயிஸ் பிரெய்ல் (1809-1852 பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.



வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.



ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18 1856 - ஆகஸ்ட் 30 1940) எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.

No comments:

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்