b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 27 August 2012

கவிதை துளிகள் கமருதீன்

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு. 




கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
இழந்தே நாம் தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
உறவுகளை நாம் பெற்றோம்
நண்பர்களைக் கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய
அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.


என் காதல் செய்தி 


கண்மூடிக் கனவிருந்தேன் கருகிப் போன 
கடந்தகாலமே கண்முன்னே நின்றது 


நீ தந்துபோன நினைவுகளில் 
செல்லரித்தது போக மீதியாய் கொஞ்சம் 
எனை தினமும் தின்று கொண்டிருக்கிறது 


புரிய மறந்த உன்னிடம் பகிரப்பட்ட 
என் உணர்வுகள்- இன்றோ விழி நீரில் 
விம்பங்களாய் மட்டும் 


உணர்வற்றவன் நீ எப்படி உணர்வாய்?
உனை மறந்து போகும் முயற்சியில் நான் தான் 
தோற்றேன் என் காதல் தோற்கவில்லை என்று 


இறைவனிடம் நான் வேண்டுகிறேன் 
என் காதலை கலைத்து சென்றவனே- உனை 
மறுபடி ஒருமுறை பார்த்தே விடக்கூடாது என்று
 
 
 
நினைவுகள் 
உன்னைச் சுற்றி 
இருக்கும் 
நினைவுகள் எல்லாம் 
என்னை உனக்கு 
நினைவுபடுத்திக்
கொண்டு தான் இருக்கும் 
உனக்கு என் நினைவுகள் 
என்னை நினைவு படுத்தினாலும் 
எப்படி உன்னால் 
மட்டும் என்னோடு பேசாமல் 
இருக்க முடிகிறது என்று 


அன்பு                         
உன் உண்மையான 

அன்புக்கு ஏங்கும் ஒரு 
பைத்தியக்காரன் நான்.....
நான் கேட்பது 
எனக்காய் நீ 
வேண்டும் என்று 
இருப்பாயா இனியாவது? 
தெரிந்துகொள் இல்லையேல் 
புரிந்துகொள்...
உன்னால் ஒரு ஜீவன் 
செத்துக் கொண்டிருப்பதை.....
மருந்தும் உன்னிடம் தான் உள்ளது பெண்ணே.....
உண்மையான பாசம்! 
நீ மட்டும் எனக்குத்தான் என்கிற வார்த்தை!
அதை நிரூபித்துக்காட்டு 
அது போதும் 
நான் இறந்தாலும் வாழ்வேன்!


                                                              





தனிமை 
காலங்கள் வசந்தங்களாய் இருந்தாலும் 
காதலித்த காலங்கள் வருடங்களாக 
நீடித்திருந்தால் காத்திருப்பதும் ஒரு வகை 
சுவாரசிய சுகமாகவே இருக்கும் 
காலத்தின் கோலத்தை கண்ணீரை 
மாற்றியது உன் காதல்........

காதலித்த உன்னை கரம்பிடிக்க 
யோசித்தேன் - ஆனால்
கண்கள் முழுவதும் கண்ணீரை 
விதைத்து விட்டு 
கண்காணாத தேசம் சென்ற 
உனக்கு - என் 
காதலின் வேதனை எப்போது 
புரியப்போகின்றது...........

கட்டி அணைத்து, தொட்டு சென்ற 
உன் கைகளும் 
கரம்பிடித்து கடலோரம் சென்ற 
நாட்களும் 
கண்சிமிட்டி கதை சொன்ன 
காலங்களும் 
கலங்காத ஓவியமாய் நெஞ்சினில் 
புதைந்ததடா.......

"காலம் முழுக்க காத்திருப்பேன்- என்
காதலன் வருவான் என"
 
என்னவளே என் இதயத்தில் கூடிகொண்டவலே
ஆயிரம் ஆசைகள் வந்த போதும் தடுமாறா எனது மனம் 

உன்நிழல் தேடி வீட்டுவாசலில் நிற்கின்றன மனம் 
துடிக்கும் வேகம் அந்த கடிகார முட்களையும் முந்திவிட்டன

என்னவளே என் இந்த மாற்றம்
காரணம் கேட்டேன் தெரியவில்லை அல்லது தெரிந்தும் 

என் மனம் உணர மறுக்கின்றன.
காலையில் உன்னை நோக்கிய எனது பார்வை மாறவில்லை.

பொழுது மட்டும் மாறிவிட்டது. மறுத்துப்பேச மனமும் இல்லை
இல்லையில்லை மனம் உண்டு ஆனால் வேறு மார்க்கம் இல்லை


பத்திரிகையில் உன்னுடைய கவிதை என்னையும் கவிஞராக்கியது 
திரைப்படத்திலும் உன்னுருவம் என்னையும் ரசிகன் ஆக்கியது

இளமையின் இனிமை உன்னைக்கட்டதும் எனது கண்கள் அறிந்தன.
என் இதயத்தின் துடிப்பினை என்றுதான் உன் இதயம் அறியுமோ???
 
 
 
                  அன்பு" அன்று, இன்று

அன்று 
அன்பு இனம் புரியாத ஓர் இதயத்துடிப்பு
இன்று அந்த வார்த்தையில் 
ஆசையாய் கேட்ட குரல் 
மீண்டும் ஆசையுடன் கேட்டது 
இவையனைத்தும் அன்று

இன்று 
அம்மா நீ ஊட்டிய தாய்ப்பால்
தன் குழந்தை மீது கொண்ட அன்பு 
தாய்ப்பாலும் மாப்பாலும் ஒன்று தான் 
தாய் தன் அழகு மீது கொண்ட அன்பு
தநதை ஊட்டிய அறிவுப்பால் தன் 
குழந்தை இவ்வுலகை வெல்ல 
வேண்டும் என்ற அன்பினால் 
தன்னுடைய மகனுடைய மதிப்பு 
தனது கௌரவம் சமூகம் தந்தைக்குட்டிய அன்பு
சமூக சேவர் சமூகம் மீது கொண்ட் அன்பு 
அவரை தனயான சமூகப்பணி செய்விக்கின்றது
செல்வம் மீது கொண்ட அன்பு இன்று 
கழவையும் பொய்யையும் தோற்றுவித்தது
வளங்கள் மீது கொண்ட அன்பு யாரையும் 
அடக்கியாள வேண்டும் என்று கூறும் அன்பு
ஆண்டவன் மீது மக்கள் கொண்ட அன்பு 
அர்ச்சனையால் கடவுளை வேண்டியது
மக்கள் மீது கடவுள் கொண்ட அன்பு 
அச்சகருடைய பணமூட்டை நிரம்பியது.
காதலன் காதலி மீது கொண்ட அன்பு 
தன்னுடைய கூரலுக்கு அடங்க வேண்டும் என்று அன்பு
காதலி காதலன் மீது கொண்ட அன்பு 
கணவனை காவல்காரணாக்கியது
ஆசிரியர் மாணவர் மீது கொண்ட அன்பு 
கட்டண கல்வி அறிமுகமானது 
மாணவர் ஆசிரியர் மீது கொண்ட அன்பு 
காசினால் ஆசிரியரை வாங்கலாம் என்ற அறிவு

"ஆசை என்ற பாவம் அன்பு என்றும் 
பெயருடன் எம் உடலினுள் புகுந்து ஆட்டிப் படைக்கின்றது."





நீ அறியாயே பால

ஆனந்தம் வந்தது ஆனந்தம் வந்தது 
ஆறுதல் தந்தது நல்ல ஆறுதல் தந்தது

மழைத்துளிகள் வெள்ளிக்கீறல்கள் போல சிவந்த மண்ணில் விழ
மண்ணில் தாகமும் தீர்ந்தது

வாடிக்கிடந்த பயிர்கள் வளம் பெற்று 
பச்சை பயிர்களாக காட்சியளிக்கின்றன

கால்நடைகள் பசி தீர்த்து எம்மை
புரிப்புடன் பார்க்கின்றன

எங்கும் எழில் எதிலும் எழில்
இறைவன் தந்த வரம் அந்த இறைவன் தந்த வரம்

நாம் மட்டும் மனிதராக பிறந்ததனால் 
நாம் மட்டும் மனிதராக பிறந்ததனால்

நாளைய உணவுக்கு எக்கம்
இன்றைய உறைவிடம் நனைந்தது

உணவுமில்லை உறைவிடமுமில்லை
பசி வயிற்றில் பயம் மனதில் 

உருளும் உலகில் உமைகளாய் நாம்
தட்டிக் கேட்க மனமுண்டு ஆனால்

தட்டுவது இரும்பு மனங்களை
புதிய பாதை திறக்கவுமில்லை எம்நிலை தீரவுமில்லை

பாலன் யேசுவே எம்மை ஏற்றுக்கொள்
நீ சுமந்து சென்றாய் நம் பாவங்களை

நாம் சுமப்பது யார் பாவம்
வானம், பூமி, இரவு, பகல் மாறும் நம்நிலை?

நீ அறியாயே பால எம் பாலா 
உடனே வா உடனே வா
 

உதாரணங்களாய் ...


        துளித்துளியாய் மண்விழுந்து
        ஒற்றுமையாய் எழுந்தோடி,
        பூவுலகம் காத்துநிற்கும்,
        ஆர்ப்பரிக்கும் காட்டாற்றின்,
        ஒற்றுமையும்-பாடம்தான்!

        மலைமேல் குடியமர்ந்து,
        மெதுவாய் பயணம்செய்து,
        கூடியாடும் நேரத்தில்,
        மழையைப் பொழிகின்ற,
        கார்முகிலும் -பாடமதான்!

        விதையாய் மண்ணில் புதைந்து,
        செடியாகி,மரமாகி,காற்றுமாகி,
        உயிர் காற்று மட்டுமின்றி,
        கனிவளமும் ,நிழலும தருகின்ற,
        தியாகமும் உதாரணம்தான்!

        கூட்டம்,கூட்டமாயிணைந்து'
        நாடுவிட்டு,நாடு பறந்துவந்து,
        கூடிவாழும் பறவையினங்கள்,
        சொல்கின்ற வாழ்க்கைப்பாடம்,
        போதிப்பதும் பாச,நேசம்தான்!

        கோடான கோடிகளாய-வானில்,
        சேர்ந்துலவும்  விண்மீன்கள்,
        இரவி்ல்வந்து ஒளிவீசும்,
        இனிய காட்சி வாழ்வுக்கு,
        வழிகாட்டும் அரிய பாடந்தான்!

        தலைவனே இல்லாதிருந்தும்,
        தனக்கென நற்பாதை வகுத்து,
        தேன் சேர்கும் தேனீயும்,
        சாரையாக அணிவகுக்கும்,
        எறும்பினமும் வழிகாட்டிகள்தான்!

        மொழியாய்ப் பிறந்துவந்து,
        வார்த்தையாய் வடிவெடுத்து,
        கவிதையாய் உருவெடுக்கும்,
        கவியின் எண்ணத்தில்-வாழும்,
        உணர்வுகளும்,புதுபாதைதான்!

        அனைத்தையும் ஆள்கின்ற,
        ஆறறிவு பெற்றமனிதன்,
        ஆசையுடன் கைகோர்த்து,
        அழிவைப் பற்றிக்கொண்டு,
        ஒற்றுமையை வேர் அறுக்கலாமா?
        பாடம்தான் படைப்பெல்லாம்,
        படித்து சீரடைவோமா!-இல்லை,
        நாட்டையும்,வீட்டையும்,
        சுடுகாடாய் மாற்றி-மடிவோமா?


 

 

ம்ம் - 20

கிள்ளி தந்த முத்தங்களை
எண்ணி விட எண்ணி
விரல் நீட்டி
மடக்கி கூட்டி
இல்லை தப்பு எனச் சொல்லி
கழித்து
படுத்திருந்த போது ஏழு
ஜன்னலோரம் வேடிக்கை
பார்த்த போது மூன்று
பனி மூட்டம் பார்க்கச் சொன்ன போது பாதி
பார்த்தும் பார்க்காமல் இருந்தானே
அப்போது ஒன்று..
நடந்து உடன் போன போது
ஒன்றா? இரண்டென்று நினைக்கிறேன்
இல்லை ஒன்று தான் ஆமாம் ஒன்று தான்
திரும்பி நின்றிருந்த போது
எட்டிப் போய் கொடுத்தேனே ஒன்று
ம்ம்ம்ம் கணக்கே சரிவரவில்லை
ஐவிரல் சேர்த்து
அழகு கன்னம் கிள்ள வெட்கி
ஒத்தை விரலால்
அவன் அசந்த நேரமெல்லாம்
தொட்டு என் இதழால்
தொட்டுக்கிட்ட முத்தமும்
ரெண்டு விரல் சேர்த்து
துளியுண்டு கிள்ளி கிள்ளி
தந்த முத்தமும் ஏனோ
கணக்கெடுக்கவே முடியவில்லை!!!
 
 

சுகந்தம் ஒன்று!!!


குரோதங்களை சுமந்து
புயலாய் தானிருந்தேன்
வன்மம் ஆணவம் கர்வமென
இலக்கில் கொள்ளா குணாதிசியங்களோடு

காற்றின் இலக்கணம்
அழித்தலின் அறிவுறுத்தலாய்
புயலாய் இருக்கவே விரும்பியது
சின்னமாய் இருந்தது சூழல்களோ?
என எண்ணும்படிக்கு

உயிர் எழுத்தொன்றின் பார்வையை
கடக்க நேர்ந்தது புயலாய் வீசி
ஓய்ந்திருந்த நேரம்..
காற்றாய் மாறி மெல்ல நகர்ந்தேன்
எழுத்தின் இலக்கை நோக்கி

அங்கும் காற்றின் தன்மை
சற்றே விலக புயலாய்
சுயம் அகம் மறைக்க
அறைந்து சாத்தினேன் கதவுகளை

சுகந்தம் ஒன்று நாசி தழுவ
சுயம் துறந்து மெல்லிய
தென்றலின் வடிவெடுக்கிறேன்
ஜன்னலில் நுழைந்து வாசம் கொள்ள

மெல்ல விழிகள் மூடி தென்றலை
அணைக்கிறது உயிர் எழுத்து
எழுத்தின் ஆளுமையில் தன்னை
இழக்கிறது தென்றல் புயலென்பதை மறந்து

தன்னிலை துறந்தவண்ணம்
எழுத்தும் தென்றலும் மையலில்
துயில் கொண்டன மூடிய கதவுகள்
மூடிய வண்ணமே..

நினைவுக்கு திரும்புகையில்
புயல் சின்னம் இறக்கப்பட்டு
மேகம் தூரலை மட்டும் சிந்தி
மேலும் குளிர்விக்க தொடங்குகிறது தென்றலை

ஒலை கொண்டு வேயப்படுகிறது
உயிரில் தோய்ந்த உறைனிலை
பற்றிய அறிக்கை மசோதாவுக்கு செல்லாமல்
சட்டமாக்கப்பட்ட இக்காதல்
 
 
 
 
 
 
                                                                                                   கமருதீன்

No comments:

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்